இந்த 6 ராசியினருக்கு இப்படி தான் இருக்குமாம்..! 

மேஷ ராசி நேயர்களே..!

கல்யாண முயற்சி கைகூடும். இல்லத்தில் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள்.கடன் சுமை குறைய வாய்ப்பு உள்ளது. பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் இன்று.நிச்சயக்கப்பட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே..!

தொழில் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டிய நாள் இது.தாய் வழியில் உங்களுக்கு நல்ல செய்தி வந்தடையும். பொதுவாழ்வில் மரியாதையும் மதிப்பும் கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே...!

அலைபேசி தகவலால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

சிம்ம ராசி நேயர்களே...!

உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பார்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.

கன்னி ராசி நேயர்களே...!

தீர்க்கமாக முடிவு எடுக்கக்கூடிய நாள்.பணவரவில் தாமதம் ஏற்படலாம். எடுத்த முயற்சியில் சிறு தொல்லைகள் அவ்வப்போது ஏற்படும்.