தமிழக சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 6 நாட்கள் விடுமுறையை அறிவித்து இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது தமிழக அரசு.


பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 15 மற்றும் 16, 17 தேதிகள் மட்டுமே விடுமுறை வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஜனவரி 14ம் தேதியும் விடுமுறை என அறித்துள்ளது தமிழக அரசு. 12 சனிக்கிழமை என்பதால் 12, 13, 14, 15, 16, 17 ஆகிய ஆறு நாட்களும் தொடர்ந்து விடுமுறை தினமாக வருகிறது. 14ம் தேதி விடுமுறௌஇயை ஈடு செய்ய பிப்ரவரி 9 தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

விடுமுறை விஷயங்களில் எம்.ஜி.ஆர் -ஜெயலலிதாவே முடிவெடுக்காத அதிரடிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார். தீபாவளி பண்டிகை நவம்பர் 6ம் தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்பட்டது. 5ம் தேதி திங்கட்கிழமை என்பதால் ஒருநாள் கூடுதலாக விடுமுறையை தமிழக அரசு விடுத்தது. இதனால் தீபாவளி பண்டிகை விடுமுறை நாட்கள் நான்கு நாட்களானது.

 

அதேபோல் தற்போதும் பொங்கல் பண்டிகைக்கு ஆறுநாட்கள் விடுமுறை அளித்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. பண்டிகை விடுமுறை ஓரிரு நாட்கள் என இருந்தபோது சொந்த ஊர் சென்று திரும்ப அவரச அவதிகளில் சிக்கித் தவித்தனர் மக்கள். அவதிகளால் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வதையே தவிர்த்து வந்தனர். 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சாவாகசமாக ஊர் சென்று திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள்  பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.