அரசு வேலை பெற அயராது பாடுபட்டு வரும் நபர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதிலும் மின்சார துறையில், கேங்க்மேன் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்காக, தகுதியுள்ள அனைவரிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. 

ஏப்ரல் 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக எழுத்து தேர்வு மற்றும் உடற்பயிற்சி தேர்வு நடைபெற உள்ளதுமொத்தம் காலியிடங்கள்: 5000, கேங்க்மேன் வேலை, 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிந்தாலே போதுமானது. தேர்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் என இரண்டு ஆண்டுகளுக்கு இதே சம்பளம் வழங்கப்படும். பின்னர், ஊதிய உயர்வு பெற்று ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்வார்கள். 

தகுதி உடையவர்கள் : 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இது குறித்த மேலும் பல விவரங்களுக்கு www.tangedco.gov.in என்ற இணையதளத்தை பாருங்கள். இந்த போஸ்டிங் பெற விண்ணப்பிக்க 22.03.2019 முதல் 22.04.2019 வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது.