50 பைசா நாணயம் கூட செல்லும்..!  கவலை வேண்டாம் மக்களே..! 

தற்போது புழக்கத்தில் உள்ள 50 பைசா நாணயம் உட்பட அனைத்து நாணயங்களும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், 50 பைசா நாணயங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. அவற்றின் வடிவமைப்புகளை மாற்றி புதிய நாணயங்களாகவும் வெளிவருகின்றன.

இந்த நிலையில் அந்த நாணயங்கள் செல்லுமா செல்லாதா என்ற குழப்பம் பொதுமக்களிடையே இன்றளவும் இருந்துவருகிறது. இன்னும் சொல்லப்போனால் பல இடங்களில் பத்து ரூபாய் நாணயம் வாங்குவதே கிடையாது.

எனவே மக்கள் மத்தியில் நிலவிவரும் இந்த சந்தேகத்தை போக்கும் வகையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது விதிமீறல் என்றும், பண பரிவர்த்தனையின் போது நாணயங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும், எனவே அனைத்து நாணயங்களும் செல்லும் என்பதால் நாணயங்களை வாங்க மறுப்பு தெரிவிக்க கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது