Asianet News TamilAsianet News Tamil

தலையில் வழுக்கையை தவிர்க்க பயன்படுத்தக்கூடாத 5 எண்ணெய்கள்! இனி அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

முடி என்பது இயற்கை நமக்கு தந்த வர பிரசாதம், அவற்றை பேணி பாதுகாப்பது அவசியம். இல்லையென்றால், வழுக்கை போன்ற பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

5 oils to avoid baldness
Author
Chennai, First Published Feb 24, 2022, 9:22 AM IST

முடி என்பது இயற்கை நமக்கு தந்த வர பிரசாதம், அவற்றை பேணி பாதுகாப்பது அவசியம். இல்லையென்றால், வழுக்கை போன்ற பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.

இயற்கை நமக்கு தந்த அற்புதங்களில் ஒன்று, முடி வளர்வது. குறிப்பாக, ஆண்களுக்கு  சொட்டை விழுவது திருமணத்திற்கு தடையாக கூட மாறலாம். இது உங்கள் தோற்றத்தில் செல்வாக்கு செலுத்தும் அளவிற்கு ஒருவரின் ஆளுமையை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் முழு தோற்றத்திற்கும் அழகை சேர்க்கிறது. 

முடி ஆரோக்கியத்தில் மரபியல் முக்கியப்பங்கு வகிக்கிறது, இதுமட்டுமின்றி உங்கள் உணவுமுறை, வானிலை, மாசுபாடு மற்றும் முடி பராமரிப்புக்கான உங்கள் ஒட்டுமொத்த அணுகுமுறை ஆகியவற்றையும் பொறுத்தது.  

பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பல்வேறு வகையான எண்ணெய்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், சில எண்ணெய்கள் முடிக்கு நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். தலைமுடிக்கு பயன்படுத்தக்கூடாத எண்ணெய்கள் எவை என்று தோல் மருத்துவர்கள் கூறுகிறார்.

நீங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டிய பல முடி பராமரிப்பு பொருட்கள் மற்றும் எண்ணெய்கள் உள்ளன. அவை என்னென்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆலிவ் எண்ணெய்:

ஆலிவ் எண்ணெய் முடியின் வேருக்கு நல்லது மற்றும் முடி பராமரிப்புக்கு நல்லது. இருப்பினும், ஆலிவ் எண்ணெயில் இயற்கையாகவே உள்ள மெடோஜெனிக், தோலின் துளைகளை அடைத்து முகப்பருவை ஏற்படுத்துகிறது. எனவே, ஒருவருக்கு முகப்பரு வரும் பழக்கம் இருந்தால், அவர் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது கூந்தலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, முடியின் அடர்த்தியை குறைப்பதுடன், முகப்பருவையும் ஏற்படுத்தும். மேலும், இது தலைமுடியில் எண்ணெய் பிசுபிசுப்பை தக்க வைக்கிறது. ஆலிவ் எண்ணெயில் உள்ள ஓலூரோபீன் முடி வளர்ச்சி சுழற்சியை நேரடியாக பாதிக்கிறது. 

விளக்கெண்ணெய்:

உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் விளக்கெண்ணெய்யை தலைக்குப் போடுவதில் பல ஆபத்துகள் உள்ளன. அதிக பசைத்தன்மையைக் கொண்ட விளக்கெண்ணெய் முடியின் தன்மையை முரடாக்கிவிடும்.
முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெயைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். பலருக்கு விளக்கெண்ணெய் ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

எலுமிச்சை எண்ணெய்:

சிலர் தலைமுடியை லேசாக பளபளப்பாக மாற்ற எலுமிச்சம்பழத்தை பயன்படுத்துவார்கள். ஆனால் மறுபுறம், இது உங்கள் தலைமுடியை மேலும் சேதப்படுத்தும். எலுமிச்சை எண்ணெய் பல ரசாயனங்களளைக் கொண்டுள்ளது. அமிலத்தன்மை கொண்ட எலுமிச்சை எண்ணெயை முறையாக பயன்படுத்தாவிட்டால், அது தீங்கு விளைவிக்கும்.உங்கள் தலைமுடிக்கு எலுமிச்சை எண்ணெய் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது, தலைமுடியின் அடர்த்தியை குறைத்து, வறண்டு போகச் செய்யும்.  

கற்பூர எண்ணெய்:

முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் கற்பூர எண்ணெய் செயல்படுகிறது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் இது முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில பக்கவிளைவுகளையும் கொண்டுள்ளது. இது உச்சந்தலையை வறண்டு போகச் செய்வதும், முகத்தை வறட்சியாக்கும். தேம்பல் மற்றும் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கும்.

கனிம எண்ணெய்:

கனிம எண்ணெய் என்பது பெரும்பாலும் பெட்ரோலியம், வெள்ளை பெட்ரோலியம், பாரஃபின், திரவ பாரஃபின், திரவ பெட்ரோலேட்டம் மற்றும் பாரஃபின் மெழுகு என பலவற்றால் தயாரிக்கப்படுகிறது. இவை கூந்தலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியவை. எனவே, முடி பராமரிப்பு பொருட்களை வாங்கும் போது, அதில் மினரல் ஆயில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மினரல் ஆயில் பயன்படுத்தினால், தோலில் வீக்கம், அரிப்பு, உச்சந்தலையில் எரிச்சல் அல்லது சொறி போன்ற பல ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்படலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios