மக்களே..! இன்னும் 5  நாட்கள் தான் இருக்கு.."சர்க்கரை அட்டையை..அரிசிக்கான அட்டையாக" மாற்றிக்கொள்ளலாம்..! 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள் பங்குபெற்றனர். அப்போது சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. 

அதில் குறிப்பாக சர்க்கரைக்கான ரேஷன் அட்டைகளை கொண்டிருப்பவர்கள், அரிசி வாங்கும் ரேஷன் அட்டைகளாக மாற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்மூலம் அரிசி அட்டையாக மாற்றிக்கொண்டால் பயனாளிகள் அதற்கு உரிய அனைத்து பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை அட்டைகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. எனவே இதனை அரிசி அட்டையாக மாற்ற விருப்பம் தெரிவிப்பவர்கள், வரும் 26 ஆம் தேதிக்குள் http://www.tnpds.gov.in என்ற இணைய பக்கத்திற்கு சென்று வட்ட வழங்கல் அதிகாரி என்ற ஒரு ஆப்ஷனை தேர்வு செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். உடன் அதில் கேட்கப்படும் ரேஷன் கார்டுகளை இணைக்கும் ஆப்ஷனில் ரேஷன் கார்டு நகலையும் இணைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்களே...தேவைப்படுபவர்கள் சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டையாக மாற்றி கொள்ள விருப்பம் தெரிவிப்பவர்கள்...இது போன்று மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.