நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 43 பேர் பாதிப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவரும், கேரளாவில் 5 பேரும் அடங்குவார்.

சீனாவில் 3,400க்கும் அதிகமானோரை கொன்று குவித்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. உலகில் 90 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி விட்டது.

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. நம் நாட்டில் பெரிய அளவில் கொரோனா வைரஸ் பரவவில்லை என்றாலும் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் லடாக் சேர்ந்த 2 பேருக்கும், தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர நேற்றைய நிலவரப்படி கேரளாவில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட லடாக்கை சேர்ந்த இருவர்களும் அண்மையில் ஈரான் சென்று வந்து இருந்தனர். தமிழகத்தை சேர்ந்தவர் அண்மையில் ஓமன் சென்று வந்து இருந்தார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவரும் உறுதியாக உள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் தகவல் தெரிவித்தது.

கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது  மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள தந்தை, தாய், மகன் ஆகியோருக்கும், அவர்களின் நெருங்கிய உறவினர் 2 பேர் என 5 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இதில் தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேரும் சமீபத்தில் இத்தாலி சென்றுவிட்டு பத்தினம்திட்டாவுக்கு திரும்பியுள்ளனர். ஆனால்இத்தாலி  கரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்ட நாடு. அந்த நாட்டுக்குச் சென்றதை அவர்கள் மறைத்துவிட்டார்கள்.

இத்தாலியிலின் வெனிஸ் நகரிலிருந்து கத்தார் தலைநகர் தோஹா வழியாக, கடந்த மாதம் 29-ம் தேதி கொச்சி வந்து கார் மூலம் பத்தினம்திட்டாவுக்கு வந்துவிட்டனர். விமானத்தில் இவர்கள் 3 பேரும் பல்வேறு நபர்களுடன் பழகியதால், கரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் இவர்களின் உறவினர்களுக்குக் காய்ச்சல் ஏற்படவே அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டபோதுதான், அவர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, தங்களின் உறவினர்கள் இத்தாலி சென்று திரும்பிய விவரத்தைத் தெரிவித்தார்கள். அவர்களுக்கும் காய்ச்சல் இருந்தது.

அவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அவர்களுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த 5 பேரும் தனித்தனியாக வார்டுகளில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்