ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பேர்..!  ஒரே நேரத்தில் குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து வைக்கும் தாயார்..! 

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்ய அவருடைய தாயார் ஏற்பாடு செய்துள்ள சம்பவம் கேரளாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் சேர்ந்தவர் பிரேம்குமார்-ரமாதேவி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 1995ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் நான்கு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஒரே நேரத்தில் 5 குழந்தைகளையும் வளர்ப்பதில் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர் இந்த தம்பதியினர். இருந்தபோதிலும் இவர்களுக்கு பலரும் உதவி செய்து உள்ளனர். 

இவர்களின் பெயர்கள்  முறையே உத்ரா, உத்ரஜா, உத்தாரா, உத்தாமா மற்றும் உத்ரஜன் என பெயரிட்டு பெற்றோர் வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு பிரேம்குமார் திடீரென மரணமடைந்துள்ளார். அதன் பின்னர் குழந்தைகளை வளர்ப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளான ரமாதேவி நம்பிக்கையுடன் அடுத்தடுத்த முன்னேற்றத்திற்கு வாழ்க்கையை நகர்த்தி  உள்ளார் 

பின்னர் பெண் பிள்ளைகள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி, 4 பெண் பிள்ளைகளுக்கும் நிச்சயதார்த்தம் செய்து முடித்துள்ளார். இவர்களுக்கு தற்போது 24 வயதாகிறது.

இதுகுறித்து ரமாதேவி தெரிவிக்கும்போது, "மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஐந்து குழந்தைகளையும் வளர்த்து படிக்க வைத்தேன். என் கணவர் இறப்பிற்குப்பின் பலரும் எனக்கு உதவி செய்தனர். தற்போது  இவர்களுக்கு 24 வயதாகிறது. ஒரே பிரசவத்தில் பிறந்த இவர்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்து தற்போது நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளது. என் மகன் மூன்றாம் ஆண்டு இளநிலை படிப்பை படித்து வருகிறான். சகோதரிகளின் திருமணத்திற்கு பிறகு வெளிநாடு செல்ல உள்ளார்.

எனவே நான்கு பெண் பிள்ளைகளுக்கும்  அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து வைக்க உள்ளேன் என தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர்களுடைய மகள்கள் தெரிவிக்கும்போது தாயையும் சகோதரர்களையும் பிரிந்து செல்வது எங்களுக்கு மிக வருத்தமாக உள்ளது. இருந்தபோதிலும் நாங்கள் நால்வரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்வது ஒரு விதமான மகிழ்ச்சியை கொடுக்கிறது என தெரிவித்துள்ளார் இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு ஆச்சரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.