மாலை நேரத்தில் அரசு அறிவித்த 3 நல்ல செய்தி..! வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுமாம்..! பெருமூச்சு விடும் மக்கள்..! 

ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் மக்கள் வீட்டை விட்டு வெளிவர முடியாத சூழல் எற்பட்டு உள்ளது. அனைத்து சேவைகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டும், கொரோனா பரவலை தவிர்க்கும் பொருட்டும் ஊரடங்கு உத்தரவு 
பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன் படி ஏற்கனவே 21 நாட்கள் மற்றும் தற்போது மீண்டும் 19 நாட்கள் என மொத்தம் 40 நாட்கள். அதாவது வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த ஒரு நிலையில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. 


வீட்டிற்கு கொண்டு வந்து தரப்படும் மருந்து 

அந்த வகையில் தற்போது பொதுமக்களுக்கு தேவையான மருந்துகளை வீடுகளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மருத்துவர் அளித்த மருந்துச்சீட்டு வைத்திருந்தால்18001212172 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைத்து ஆர்டர் செய்துக்கொள்ளலாம் என சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார் 


தொழிலாளர்களின் ஊதியம் பெற தீர்வு 

தொழிலாளர்களின் ஊதியம் தொடர்பான குறைகளைத் தீர்க்க நாடு முழுவதும் 20 கட்டுப்பாட்டு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த தொழிலாளர்கள் 96771 12646 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என்றும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தொழிலாளர்களின் பிரச்சனைகளை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 


அனைத்து ரயில் முன்பதிவுகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு:

மே 3 வரை ரத்தான ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், முன்பதிவு டிக்கெட்களை பயணிகள் ரத்து செய்ய தேவையில்லை என்றும் முழு கட்டணமும் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. விமான சேவையும் மே 3 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.