தீபாவளிக்கு 3 நாட்கள் லீவு..! செம குஷியில் மக்கள்..! 

தீபாவளி நெருங்க இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் கூடுதலாக வரும் திங்கட்கிழமையும் சேர்த்து, 3 நாடுகள் விடுமுறை என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.  அதாவது 28 ஆம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வரும் அக்டோபர் 27ஆம் தேதியன்று தீபாவளி வருவதால்... அது ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் கூட ஏற்கனவே அது விடுமுறை நாள் என்ற பேச்சு இருந்தது. பின்னர் அதற்கு அடுத்த நாளே 28 ஆம் தேதி திங்கட்கிழமை வழக்கம்போல் பணிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெளியூருக்கு செல்லக்கூடிய நபர்கள், சென்னையிலிருந்து வெளியூர் செல்லக்கூடிய நபர்கள் மீண்டும் அவரவர் ஊரில் இருந்து சென்னை திரும்ப வேண்டியவர்கள் என அனைவரும் ஒரு விதமான சிரமத்தை உணர்ந்தனர்.

மேலும், வெறும் இரண்டு நாட்களே இருந்த தீபாவளி பண்டிகையை முழுமையாக கொண்டாட முடியுமா என்ற கேள்வியும் இருந்தது. மேலும் பயணம் மேற்கொள்வதற்கு இந்த இரண்டு நாட்கள் போதுமானதாக இருக்காது என்றும் அதிக கூட்ட நெரிசல் காரணமாக சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்ற பொதுவான கருத்தும் இருந்துவந்தது. இதற்கிடையில் தீபாவளியை முன்னிட்டு 26 ஆம் தேதி ஏற்கனவே விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திங்கட்கிழமை அதாவது தீபாவளியான 27ஆம் தேதிக்கு பிறகு வரும் 28ஆம் தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறை என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அன்றைய தினத்தில் அரசு அலுவலகங்கள் கல்லூரி பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்