அடுத்த அதிர்ச்சி..! சென்னையின் முக்கியப்பகுதிகளில் சுற்றித்திரிந்த 29 பேருக்கு கொரோனா பரிசோதனை..! 

சென்னையில் நோய் தோற்று அதிகரித்து வரும் நிலையில், மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று   இருக்குமா என்ற சந்தேகத்தின் பேரில் சோதனை செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னையில்  மட்டுமே 150 கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த ஒரு நிலையில் குஜராத்தின் அகமதாபாத் பகுதியில் இருந்து சென்னை வந்து மதப்பிரசாரத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் சென்னையின் முக்கிய பகுதிகளான புரசைவாக்கம்,தேனாம்பேட்டை,சூளை,பெரியமேடு மசூதிகளில் மதப்பிரசாரம் செய்த வந்ததாக போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளதை  அடுத்து, குஜராத்தை சேர்ந்த 29 பேர் மற்றும் அரபு பாடசாலையை சேர்ந்த மேலாளர் பணியாளர்கள் என மொத்தம் 39 பேருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தற்போயது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், பரிசோதனை செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் தப்லீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது