27 stars having its logo and it is so powerful to right person with horoscope
வாழ்க்கையில் வெற்றி தரும் ஜென்ம நட்சத்திர குறியீடுகள்
அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய வடிவங்களை தினமும் பார்த்து வந்தாலோ அல்லது பயன்படுத்தி வந்தாலோ வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம் என்பது ஐதீகம்.
உதாரணமாக:
ராமன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான வில்லேந்தி ராவணனை வென்றான்...
கிருஷ்ணன் தன் ஜென்ம நட்சத்திர குறியீடான தேரை ஓட்டி பாண்டவர்களுக்கு வெற்றி தேடி தந்தான்...
நட்சத்தரவடிவம்
எந்தெந்த நட்சத்திர ராசிக்காரர்கள், எந்தெந்த குறியீடுகளை பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.
அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - யோனி,அடுப்பு,முக்கோணம்
கிருத்திகை - கத்தி,கற்றை,வாள்,தீஜ்வாலை
ரோஹிணி - தேர்,வண்டி,கோயில்,ஆலமரம்,ஊற்றால்,சகடம்
மிருகசீரிடம் - மான்தலை,தேங்கைக்கண்
திருவாதிரை - மனிததலை,வைரம்,கண்ணீர்துளி
புனர்பூசம் - வில்
பூசம் - புடலம்பூ,அம்புக்கூடு,பசுவின்மடி
ஆயில்யம் - சர்ப்பம்,அம்மி
மகம் - வீடு,பல்லக்கு,நுகம்
பூரம் - கட்டில்கால்,கண்கள்,அத்திமரம்,சதுரம்,மெத்தை
உத்திரம் - கட்டில்கால்,கம்பு,குச்சி,மெத்தை
ஹஸ்தம் - கை
சித்திரை - முத்து,புலிக்கண்
ஸ்வாதி - பவளம்,தீபம்
விசாகம் - முறம்,தோரணம்,குயவன்சக்கரம்
அனுசம் - குடை,முடப்பனை,தாமரை,வில்வளசல்
கேட்டை - குடை,குண்டலம்,ஈட்டி
மூலம் - அங்குசம்,சிங்கத்தின்வால்,பொற்காளம்,யானையின்துதிக்கை
பூராடம் - கட்டில்கால்
உத்திராடம் - கட்டில்கால்
திருவோணம் - முழக்கோல்,மூன்றுபாதச்சுவடு,அம்பு
அவிட்டம் - மிருதங்கம்,உடுக்கை
சதயம் - பூங்கொத்து,மூலிகைகொத்து
பூரட்டாதி - கட்டில்கால்
உத்திரட்டாதி - கட்டில்கால்
ரேவதி - மீன்,படகு.
ஒவ்வொரு ராசிக்கும் வெற்றிதரும் நட்சத்திர குறியீடுகள் என்ன வென்பதை பார்க்கலாம்...
27 நட்சத்திரங்களுக்கும் உருவம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த குறியீடுகளை நாம் தினமும் பார்க்கும் விதமாக அமைத்துக்கொண்டால் வாழ்வில் இனி எல்லாம் வெற்றி தான்..

எப்படி பயன்படுத்தலாம் ?
நாம் வசிக்கும் வீடு, பணிபுரியும் இடம்,அணியும் ஆடை, visiting card, Letter pad இவைகளில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை சின்னங்களாக பயன்படுத்திவந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்.
இதற்கு புராண உதாரணங்களை பாருங்கள்....
பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் ரோஹிணி.ரோஹிணி நட்சத்திரத்தின் உருவம் தேர்.ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து பாண்டவர்களுக்கு மஹாபாரதப்போரில் வெற்றி தேடித்தந்தார்.
பகவான் ஸ்ரீராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசமாகும். புனர்பூசம் நட்சத்திரத்தின் உருவம் வில்லாகும். ஸ்ரீராமர் வில்லேந்தி ராவணனை வெற்றி கொண்டார்.
பகவான் ஸ்ரீவாமனரின் ஜென்ம நட்சத்திரம் திருவோணமாகும். திருவோணம் நட்சத்திரத்தின் உருவம் மூன்று பாதச்சுவடுகள் என கூறப்படுகிறது. ஸ்ரீவாமனர் ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து மூன்றாவது அடியை மஹாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவன் கர்வத்தை அடக்கினார்.எனவே ஸ்ரீவாமனருக்கு உலகளந்த பெருமாள் என்னும் நாமம் உண்டு.
ஸ்ரீஅனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலமாகும். மூலம் நட்சத்திரத்தின் உருவம் சிங்கத்தின் வால் என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.அனுமன் கையிலிருக்கும் ஆயுதம் சிங்கத்தின் வால் போன்ற வடிவத்தில்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலிருந்து அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய உருவத்தை,தன்னோடு வைத்திருந்தால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெறலாம்
