34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழப்பு..! வெளியான அதிர்ச்சி தகவல்...! 

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வளைகுடா நாடுகளில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்துள்ளதாக ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம்,கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர். சொல்லப்போனால் உலகம் முழுவதுமே இந்தியர்கள் பரவி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள் இல்லாத நாடே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்வது வழக்கம்.

இந்தநிலையில் ஒரு நாளைக்கு குறைந்தது 15 இந்தியர்கள் உயிரிழப்பதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து பதிலளித்த அவர் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 33,988 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டுமே 4,223 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்து உள்ளார். அதில் குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா ஆகிய இந்த இரண்டு நாடுகளில் தான் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் வளைகுடா நாடுகளில் உயிரிழக்கும் நபர்களில் இந்தியாவிலேயே குறிப்பாக தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 1200 பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.