பிரபல தொலைகாட்சி நிறுவன ஒளிபரப்புக்கு , 24 மணிநேரம் தடை...!!! இந்தியாவில் முதல் முறை ...!!!

கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதியன்று, பஞ்சாப் மாநிலம், பதன்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்தினர். 4 நாட்கள் நடைபெற்ற இந்த தாக்குதல் பற்றி, பொறுப்பற்ற வகையில், சில அதிமுக்கியமான தகவல்களை என்டிடிவி இந்தியா நிறுவனத்தின் இந்தி மொழி டிவி சேனல் ஒளிபரப்பு செய்தது.

இந்த ஒளிபரப்பின் போது, அதிமுக்கியமான தகவல்களை ஒளிபரப்பியதால் தான் , தீவிரவாதிகளுக்குக் கூடுதல் தகவல்களை காட்டிக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் புகார் எழுந்தது.

இந்நிலையில், ஏற்கனவே மும்பை தீவிரவாத தாக்குதலின்போது, என்டிடிவி இந்தியா இதேபோன்று செயல்பட்டதாலேயே, அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது.

இந்நிலையில், பதான்கோட் செய்தி வெளியீடு பற்றி, மத்திய அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக , இந்த குற்றசாட்டு நிரூபிக்கபட்டால், நவம்பர் 9 ஆம் தேதியன்று என்டிடிவி இந்தியா டிவி சேனல் ஒளிபரப்பு முடக்கப்பட வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு கருதி, இந்திய அளவில் செய்தியை மக்களுக்கு தெரிவிக்கும் ஒரு தொலைகாட்சியை முடக்கப்படுவது இதுவே முதல் முறை என்பதும், இந்த தகவல் அனைவரிடமும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.