அடுத்த பெரும் அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா ..! 

உலக நாடுகளை பெரும் பீதியில் ஆழ்த்தி உள்ள கொரோனா வைரஸ் தற்போது தமிழகத்தில் சற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இதன் எதிரொலியாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையிலும், கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது.

தற்போது இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுக்க 2 ஆம் கட்டத்தில் தான் உள்ளது என தெரிவித்தாலும், மத்திய மாநில அரசுகள் பெரும் நடவடிக்கை எடுத்தும் மக்கள் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதால் தான் கொரோனா பரவல் வேகமெடுக்க காரணம் என தெரியவந்துள்ளது 

தற்போது இந்தியாவில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7000ஐ தாண்டியுள்ளது.மேலும் 199 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மேலும் இந்தியாவில் பீகாரில் 60 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிர்ச்சி தரும் விஷயமாக இவற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது  

அதாவது பாட்னாவில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவான் மாவட்டத்தை சேர்ந்த பன்ஜ்வார் என்ற கிராமம்.இங்கு,கடந்த மாதம் 16 ஆம் தேதி  ஓமன் நகரிலிருந்து நபர் வந்துள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால், கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. பின்னர் சோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளது. அதன் பின் அவர் நெருங்கி பழகி வந்த அவர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 23 பேருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது தவிர அதே கிராமத்தில் மற்ற 2 பேருக்கு கொரோனா இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆக மொத்தத்தில் அந்த ஒரு இடத்தில் மட்டும் ஒரே குடும்பத்தில் 23 பேருக்கும் மற்றவர்கள் என சேர்த்து தற்போது 31 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர்களில் 4 பேர் குணமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.