Asianet News TamilAsianet News Tamil

21 வயதில் நீதிபதி...! இந்தியாவில் இவர் தான் பர்ஸ்ட்..! பணபலத்துக்கு ஆசை படாமல் நீதி வழங்குவதே என் வேலை..!

ராஜஸ்தான்  மாநிலத்தில்  உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தில் மானசரோவர் பகுதியை சேர்ந்தவர் மயங்க் பிரதாப் சிங் என்பவர். இவர் பள்ளி வகுப்பை முடித்துவிட்டு நேரடியாக 5 ஆண்டு கால சட்டபடிப்பை ராஜஸ்தான் பல்கலை கழகத்தில் படித்து முடித்தார்.

21 yrs old  pradap singh selected as judge in so young age and  it is the record break now in india
Author
Chennai, First Published Nov 22, 2019, 1:31 PM IST

21 வயதில் நீதிபதி...! இந்தியாவில் இவர் தான் பர்ஸ்ட்..! பணபலத்துக்கு ஆசை படாமல் நீதி வழங்குவதே என் வேலை..! 

ராஜஸ்தானை சேர்ந்த 21 வயதே ஆன இளைஞர் நாட்டிலேயே மிக இள வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்று சாதனை படைத்து உள்ளார் 

ராஜஸ்தான் மாநிலத்தில்  உள்ள ஜெய்ப்பூர் மாவட்டத்தில் மானசரோவர் பகுதியை சேர்ந்தவர் மயங்க் பிரதாப் சிங் என்பவர். இவர் பள்ளி வகுப்பை முடித்துவிட்டு நேரடியாக 5 ஆண்டு கால சட்டபடிப்பை ராஜஸ்தான் பல்கலை கழகத்தில் படித்து முடித்தார். அதன் பிறகு நீதிபதிகளுக்கான தகுதி தேர்விலும் தேர்த்தி பெற்றார்.

இதன் மூலம் இந்தியாவிலேயே மிக இளம் வயதில் நீதிபதியாக கூடிய ஓர் அற்புத சாதனையை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளார். மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கும் போது ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 13 மணி நேரம் வரை தொடர்ந்து படித்து வந்ததாகவும்,பணபலத்துக்கு ஆசை படாமல் வெளியில் இருந்து எந்த அழுத்தம் வந்தாலும் நேர்மையான முறையில் நீதி வழங்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என தெரிவித்து உள்ளார். மேலும் அவர் தேர்வில் வெற்றி பெறுவதற்கு பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

21 yrs old  pradap singh selected as judge in so young age and  it is the record break now in india

இளம் வயது நீதிபதியான மயங்க் பிரதாப் சிங்கிற்கு நாடு முழுவதும் இருந்து தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. நீதிபதி ஆவதற்கு தேவையான குறைந்தபட்ச வயது வரம்பை 23 இல் இருந்து 21 ஆக குறைத்து ராஜஸ்தான் நீதிமன்றம் இந்த ஆண்டு தான் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios