Asianet News TamilAsianet News Tamil

2020-ம் ஆண்டில் இப்படி ஒரு சிக்கலா..? கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே..!

இன்னும் சில தினங்களில் பிறக்க உள்ள புத்தாண்டு (2020) அபூர்வமானது. இந்த ஆண்டில் அடுத்தடுத்த இரு இலக்கங்கள் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. இனி 101 ஆண்டுகள் கழித்துதான் இதேபோன்ற இலக்கத்தில் (2121) ஆண்டு வரும். தற்போது இதில்தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக நாம் தேதியைக் குறிப்பிடும்போது ஆண்டை முழுமையாக எழுதமாட்டோம்.

2020 new year issue in documents
Author
Chennai, First Published Dec 28, 2019, 8:41 AM IST

புதிதாகப் பிறக்க உள்ள புத்தாண்டைக் குறிப்பிடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

2020 new year issue in documents
இன்னும் சில தினங்களில் பிறக்க உள்ள புத்தாண்டு (2020) அபூர்வமானது. இந்த ஆண்டில் அடுத்தடுத்த இரு இலக்கங்கள் ஒரே மாதிரியாக அமைந்துள்ளன. இனி 101 ஆண்டுகள் கழித்துதான் இதேபோன்ற இலக்கத்தில் (2121) ஆண்டு வரும். தற்போது இதில்தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வழக்கமாக நாம் தேதியைக் குறிப்பிடும்போது ஆண்டை முழுமையாக எழுதமாட்டோம். ஒருவர் தன்னுடைய பிறந்த நாளை எழுதும்போதும்கூட ஆண்டை முழுமையாகக் குறிப்பிட மாட்டோம். உதாரணமாக 09-10-79, 25-11-13 என்றே குறிப்பிடுவோம். இந்த ஆண்டு ஆண்டை சுருக்கி எழுத முடியாத நிலை உருவாகியுள்ளது.

2020 new year issue in documents
எப்படி என்று கேட்கிறீர்களா? அதாவது சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், முக்கியமான ஆவணங்கள் ஆகியவற்றில் ஆண்டைச் சுருக்கி 20 என்று குறிப்பிட்டால், அது பிற்காலத்தில் பல பிரச்னைகளுக்கு வழிவகுத்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள். ஆவணங்களில் வெறுமனே இந்த ஆண்டை 20 என்று குறிப்பிட்டால், அதன் பக்கத்தில் 01 முதல் 19 (2001 - 2019) வரை முறைகேடாகவோ தங்கள் வசதிக்கேற்பவோ குறிப்பிட்டு திருத்திக்கொள்ள முடியும். அப்படி திருத்தும்போது ஆவணத்தின் ஆண்டு மாறிவிடும் அபாயம் உள்ளது. எனவே இந்த ஆண்டை மட்டும் சிரமம் பார்க்காமல் முழுமையாக எழுத வேண்டியது அவசியம்.2020 new year issue in documents
எனவே இந்த ஆண்டு முழுவதும் சிரமம் பாராமல் ஆண்டை 20 என சுருக்கமாக குறிப்பிடாமல் 2020 என எழுத பழகிக்கொள்ளுங்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களுக்கு தேதியைக் குறிப்பிட்டு பிறர் தரும்போதும், அதில் 2020 என முழுமையாக இருக்கிறதா எனப் பார்த்து வாங்குங்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios