களைக்கட்டியது அச்சடிக்கும் பணி....!!! விரைவில் 20,100 ரூபாய் நோட்டுக்கள்....!!!

நாசிக்கில் உள்ள , பணம் அச்சடிக்கும் கூடத்தில், 7 கோடியே 40 லட்சம் ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதாவது,

ஒரு கோடியே 30 லட்சம் - ரூ.500 நோட்டு.

3 கோடியே 10 லட்சம் - ரூ.100 நோட்டு

எஞ்சிய 3 கோடி - ரூ.20 நோட்டு மற்றும் ரூ.500 நோட்டுகளாகவும் அச்சடிக்கபட்டுள்ளது.

இதன் மொத்தம் மதிப்பு - ரூ.650 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.....

எஸ்.பி.எம்.சி.ஐ.எல். நிறுவனம்:

நாசிக் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அச்சு கூடங்களில் ரூ.500 நோட்டுக்களை அச்சடிக்கிறது.....

மேலும், செக்யூரிட்டி ஆவணங்களையும் அச்சடித்து கொடுப்பதோடு நாணயங்களையும் தயாரித்து கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முத்திரை தாள்கள், பாஸ்போர்ட், விசா மற்றும் ரெவன்யூ ஸ்டாம்ப்களையும் இந்த நிறுவனம் அச்சடித்து அரசுக்கு கொடுக்கிறது என்பது கூடுதல் தகவல்.