மது கிடைக்காததால் "ஷேவிங் லோஷன் +சோடா" அருந்திய இருவர் ஸ்பாட் அவுட்..! மற்றொருவர் கவலைக்கிடம்!

மதுபாட்டில் கிடைக்காததால் ஷேவிங் லோஷனை மதுபானமாக நினைத்து குடித்த 3 பேரில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மற்றொருவர் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தை சேர்ந்தவர் அன்வர் ராஜா இவருக்கு வயது 35. வாகனத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். ராமநாதபுரத்தை சேர்ந்த அருண்பாண்டி(27) மற்றும் அசன் மைதீன் இவருக்கு வயது (35). இவர்கள் மீன்பிடித் தொழிலை செய்து வந்தனர். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது கொரோன எதிரொலியால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து கடைகளும் வணிக வளாகங்களும் மூடப்பட்டு உள்ளது. சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவில் மக்கள் அவரவர் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர். மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் மட்டும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மது கடைகளும் மூடப்பட்டு உள்ளது.

நிலைமை இப்படி இருக்க, மது அருந்தும் பழக்கம் கொண்டவர்களான இவர்கள் மூவரும் ஷேவிங் செய்த பின் முகத்தில் தடவும் லோஷனை வாங்கி சென்று கோட்டைப்பட்டினம் பகுதியில் அமர்ந்து அங்கு ஒரு கடையில் கிடைத்த சோடாவை பெற்று, லோஷன் - சோடா கலந்து மது போன்று அருந்தி உள்ளனர்.

இதனை அருந்தியவுடன் சில நிமிடங்களில் மூன்று பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உள்ளது.இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இவர்களில் அருண்பாண்டி, அசன் மைதீன் ஆகியோர் உயிர் இழந்தனர். அன்வர்ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு உள்ளதால், உண்ண உணவும் இருக்க இடமும் கிடைத்தால் போதும் என்ற நிலையிலும்  கொரோனா பாதிக்காமல் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் பயந்து இருக்கும்போது, இவர்களுக்கு மது அருந்துவதில் உள்ள மோகத்தால் தங்களது உயிரை மாய்த்துக்கொண்டுள்ள   சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத