உஷார் பெற்றோர்களே..! சாக்லேட் கொடுத்து 2 குழந்தை கடத்தல்..! 

சேலத்தில் சாக்லேட் கொடுத்து குழந்தையை கடத்த முயன்றதாக பெண் ஒருவரை ஊர் மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே குழந்தை விற்பது தொடர்பாக எழுந்துள்ள புகார் தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சேலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி என்ற பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தையிடம் முன்பின் தெரியாத ஒரு பெண் வந்து சாக்லேட் கொடுத்து அன்பாக பேசி உள்ளார். பின்னர் அங்கு செல்லலாமா? இங்கே போகலாமா ? கடைக்கு செல்லலாமா ? என குழந்தையுடன் பேசியுள்ளார். இதனை கண்ட அந்த ஊர் பொதுமக்கள் அப்பெண்ணிடம் நீ யார்? எங்கிருந்து வந்துள்ளாய்? எதற்காக இந்த குழந்தையிடம் பேசுகிறாய்? குழந்தைக்கு ஏன் சாக்லேட் கொடுக்கிறாய்? இதுபோன்ற பல கேள்விகளை முன்வைத்தனர். இதற்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

பின்னர் அப்பெண்ணை பிடித்து சந்தேகத்தின் பேரில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அப்பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக பட்ட பகலில் இரண்டு குழந்தைகளை கடத்தி உள்ளார் இந்த பெண் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இதனால் குழந்தை வைத்துள்ள பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர்.