தாயின் வயிற்றுக்குள் இரண்டு குழந்தைகளும் சண்டையிடும் அழகிய காட்சியை ஸ்கேன் செய்யும்போது ரெக்கார்ட் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர் பெற்றோர்கள்.  இந்த வீடியோ அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவை சேர்ந்த 28 வயதான தாவோ என்பவர் அவருடைய கர்ப்பிணி மனைவியை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அப்போது ஸ்கேன் செய்தபோது கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடும் அழகிய காட்சியை கண்டுள்ளனர். உடனடியாக தன்னுடைய மொபைல் போனை எடுத்து வீடியோவாக பதிவு செய்த அவர் தற்போது அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு மகிழ்ந்து உள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த சமூகவலைத்தள வாசிகள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ மட்டும் இதுவரை இரண்டரை மில்லியன் பார்வையாளர்களை கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிறந்துள்ள இந்த குழந்தைகளுக்கு செர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர் பெற்றோர்கள்.

https://youtu.be/sS-4sWOgjCY