2 பேருக்கு கொரோனா உறுதி - மத்திய அரசு அவசர அறிவிப்பு! இந்தியாவையும் விட்டுவைக்காத கொரோனா!

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அந்த வகையில் கடும் எச்சரிக்கையுடன் பல்வேறு சோதனைகளுக்கு பிறகே வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளை சோதனை செய்து, பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஒரு நிலையில் இதுவரையிலும் இந்தியாவில் யாரும் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட இல்லை என பல்வேறு சோதனைகள் மூலம் தெரியப்படுத்த பட்டு வந்தது. தற்போது வரை உலக அளவில் 3 ஆயிரம் பேருக்கும் மேலாக கொரோனா வைரசால் இறந்துள்ளனர். சீனாவில் மட்டும் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு சில நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வகையில் தற்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது.

அதன்படி டெல்லி மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் இத்தாலியில் இருந்து டெல்லி வந்த ஒருவருக்கும், துபாயிலிருந்து தெலுங்கானா வந்த ஒருவருக்கும் கொரோனா உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதாவது சமீபத்தில் இத்தாலி சென்று விட்டு திரும்பிய டெல்லியை சேர்ந்த நபருக்கும், அதே போன்று துபாய் சென்று தெலுங்கானாவிற்கு திரும்பிய ஒருவருக்கும் கொரோனா  வைரஸ் இருப்பது கண்டுபிடுக்கப்பட்டு உள்ளது. 

சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவி குணமான நிலையில் தற்போது மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.