2 நாட்களுக்கு வயிறார சோறு போடும் “அன்ன பிதா கோவிந்தன் “ மனதார வாழ்த்திய மக்கள் ....!!!

நெல்லை என்.ஜி.ஓ காலனியில் உள்ள ஹோட்டல் ஶ்ரீ பாலாஜி நிர்வாகம், தங்களது ஹோட்டலில் நேற்றும், இன்றும் யார் வேண்டுமானாலும் சாப்பிட்டுச் செல்லலாம் என அறிவித்தது.

“500 , 1000 தான் இருக்கா பரவாயில்ல வந்து சாப்புட்டு போங்க, முடிஞ்சா அப்புறம் கொடுங்க கொடுக்கலன்னாலும் பரவாயில்ல” என நெல்லை ஹொட்டலின் அறிவிப்பிற்கு குவியும் பாராட்டுக்கள் சொல்லி மாளாது.

இதற்கான அறிவிப்பு பலகையை, பல பொது இடங்களிலும் வைத்தது . இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் பலரும், இந்த ஓட்டலுக்கு சென்று பசி தீர்த்தனர்.......

சமூக அக்கறையும் , அன்புள்ளம் கொண்ட ஓட்டல் உரிமையாளர் கோவிந்தன் அவர்களுக்கே அனைத்து பாராட்டுகளும்......!!

பணம் இல்லாமல் கஷ்டம் படலாம் , ஆனால் சோறு இல்லாமல் மக்கள் வாட கூடாது என்பதால், கோவிந்தன் அவர்களின் மனதில் எழுந்த அற்புத நிகழ்வு தான் இது....!!

அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள்.......