தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆப்பு ..! 1807 களின் பதிவு அதிரடி ரத்து...!  

வெளிநாட்டில் இருந்து வரும் நன்கொடைகளை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 1807 தொண்டு நிறுவனங்களின் பதிவை ரத்து செய்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. 

மத்தியில் பாஜக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய நன்கொடைகளை தடுத்து நிறுத்த பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பதிவினை ரத்து செய்ய முயற்சி மேற்கொண்டு வந்தது. 

அதன்படி வருடத்திற்கு ஒருமுறை வரவு செலவு கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டுமென ஒழுங்குமுறை சட்டப்படி புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இருந்தது. அப்படி இருந்தும் இதுவரை தாக்கல் செய்யாத தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 14 ஆயிரத்து 800 தொண்டு நிறுவனங்களின் பதிவை தற்போது ரத்து செய்துள்ளது.

இதற்கிடையில் இந்த ஆண்டு மட்டும் மேலும் 1807 தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பதிவை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் கடந்த 6 ஆண்டுகளாக வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை என்பது கூடுதல் தகவல். பலமுறை எச்சரித்தும் அதற்கான முழு விவரத்தை தெரிவித்தும் இதுவரை தாக்கல் செய்யாததால் இந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.