இப்பவே என்ன ஒரு வில்லத்தனம்..!  சிறுவனை கடத்தி 3 லட்சம் கேட்டு மிரட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்..! அதிர்ச்சி சம்பவம்...!

ஏழு வயது சிறுவனை பணத்திற்காக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது மீர்பேட் என்ற பகுதி. இங்கு வசித்து வந்த ஒரு தம்பதியினரின் 7 வயது சிறுவன் திடீரென காணாமல் போயுள்ளார். பின்னர் இவருடைய பெற்றோர் அக்கம்  பக்கத்திலும் அங்குமிங்குமாக தேடி வந்துள்ளனர். பிறகு ஒரு கட்டத்தில் சிறுவன் கிடைக்காததால் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது தொடர்பாக பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை கைது செய்துள்ளனர்.

இதற்கு முன்னதாக கடத்தப்பட்ட சிறுவனின் பெற்றோருக்கு ஒரு போன்கால் வந்துள்ளது. அதில் உங்கள் பையன் கிடைக்க வேண்டும் என்றால் மூன்று லட்சம் ரூபாய் தரவேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளான்.

இதன் அடிப்படையில் மீண்டும் விசாரணையை நடத்திய போலீசார் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், சிறுவனை கடத்தி 3 லட்சம் பணத்திற்காக போன் கால் செய்து மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.