தற்போது உள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்திய 19 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.
நாளை.. முக்கிய அறிவிப்பு..! ஊரடங்கு நீட்டிப்பு - "எந்த முடிவாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக மட்டுமே"..!
தற்போது உள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவை மீண்டும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்திய 19 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர்.

கொரோனா நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் பாதித்த மாநிலங்களில் 2 ஆவது இடத்தில தமிழகம் உள்ளது. இதன் காரணமாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு அதில் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள் என 12 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.


இந்த ஒரு நிலையில், நாளை 11 ஆம் தேதி, பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் இன்று விடுக்கப்பட்ட பரிந்துரைப்படி நாளை தமிழகத்தின் சார்பாகவும் மத்திய அரசிடம் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க பரிந்துரை செய்யும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அதன் படி நாளை 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை தான் ஊரடங்கு உத்தரவு என்ற மனநிலையில் இருந்தவர்களுக்கு இது ஒரு ஷாக்கிங் செய்தியாக இருந்தாலும், கொரோனா முன் நாம் வேறு எதற்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாத சூழலில் உள்ளோம் என்பதை புரிந்துக்கொண்டு அரசு எடுக்கும் முடிவு மக்கள் நலன் சார்ந்தது என்பதை உணர்தல் வேண்டும்.
