ஒரு பையில் "13 பொருட்கள்"...! நாளை முதல் மிக குறைந்த விலையில்.. அதிரடி காட்டும் அமைச்சர் ஜெயக்குமார்..! 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள இந்த நிலையில் மக்கள் எந்த சிரமத்திற்கும் ஆளாகாமல் இருக்க அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

அதன்படி, தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மிக முக்கியமாக உணவு பொருட்களை எந்த சிரமமும் இல்லாமல் மக்கள் பெற வேண்டும் என்பதற்காக மிகச்சிறந்த ஏற்பாட்டை செய்துள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

அதாவது வட சென்னை மற்றும் ராயபுரம் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் எம்சி ரோடு,வீராஸ்  துணிக்கடைஎதிரில், அமைந்துள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் காய்கறி விற்பனை அங்காடி 31.3.2020 செவ்வாய்க்கிழமை முதல் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலான நேரத்திற்குள் வந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

மேலும் ஒரு பையில் 13 பொருட்கள் கொடுக்கப்படும் என்றும், மிக குறைந்த விலையில் மக்கள் இதனை வாங்கி செல்லலாம் எனவும் குறிப்பிட்டு உள்ளார். அங்குள்ள ஊழியர்கள் சொல்வதை கேட்டு அதற்கேற்றவாறு சமூக விலகல் கடைபிடித்து யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் தன்னை பாதுகாத்து மற்றவர்களையும் பாதுகாக்கும் வகையில் பொருட்களை வாங்கிச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார் 

காய்கறி உணவுபொருட்களின் விவரம்

வெங்காயம் ஒருகிலோ, தக்காளி ஒரு கிலோ, உருளை கிழங்கு ஒரு கிலோ, தேங்காய் 2, கத்திரிக்காய் அரை கிலோ வெண்டைக்காய் அரை கிலோ,வாழைக்காய் 2, கோஸ் அரை கிலோ, பீன்ஸ் அரை கிலோ,கேரட் அரை கிலோ, பச்சை மிளகாய் - 150 கிராம், இஞ்சி 50 கிராம்,சேனை கிழங்கு அரை கிலோ, கருவேப்பிலை சிறிதளவு  வழங்ப்படும் 
 
144 உத்தரவு இருப்பதால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் கூட சிரமம் ஏற்படும் என்ற நிலை மாறி, எந்த சிரமமும் இல்லாமல் மக்கள் பாதுகாப்பாக வந்து பொருட்களை பெற்று செல்லலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளது அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது .