அதிர்ச்சி தகவல்.! வேலை கேட்டு வந்த பெண்களை வைத்து பாலியல் தொழில்! 13 பேர் அதிரடி கைது..! 

அப்பாவி பெண்களை நம்பிக்கை வார்த்தை கூறி அழைத்து வந்து பாலியல் தொழிலில் கட்டாயமாக ஈடுபடுத்திய 13 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு நகரங்களில் பாலியல் தொழில் நடந்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன் பெயரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு அபிராமி நகர், ராஜகோபுரம், சின்னப்ப நகர், பெரியார் நகர், டிவிஎஸ் நகர், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட சில வீடுகளை அதிரடியாக சோதனை செய்தனர் போலீசார்.

அப்போது பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 9  பெண்களை மீட்டு காப்பகத்திற்கு  அனுப்பிவைத்தனர். இதில் தொடர்புடைய 5 பெண்கள் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல், வேலை கிடைத்தால் போதும், மாதம் தோறும் குறிப்பிட்ட அளவுக்கு சம்பளம் கிடைத்தால் போதும் என வேலை தேடி வருபவர்களின் வறுமையை குறிவைத்து பிடித்து அவர்களை மூளைச் சலவை செய்து வேலை வாங்கி கொடுப்பதாகவும் மாதம் தோறும் நன்கு சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி பின்னர் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபட செய்து உள்ளனர்.

இதற்காக 4 கார் ஒரு ஆட்டோ மற்றும் குறிப்பிட்ட அளவு தொகையை  வைத்திருந்துள்ளனர்.
இவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.