சென்னையில் வீடு வீடாக சென்று நடத்தப்பட்ட பரிசோதனையில் 1222 பேருக்கு காய்ச்சல் இருமல் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர்கள் அனைவரையும் 14 நாட்கள் கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் வேகமெடுத்து உள்ள கொரோனா பாதிப்பு சென்னையில் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக யாருக்காவது கரோனா அறிகுறிகள் இருக்கின்றதா என வீடு வீடாக சென்று சோதனை செய்தனர் மாநகராட்சி ஊழியர்கள். கடந்த கடந்த மார்ச் 5ஆம் தேதி தொடங்கிய இந்த பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இவ்வாறு மேற்கொண்டதில் யாருக்கெல்லாம் நீரிழிவு ரத்த அழுத்தம் நோய் இருக்கின்றது என்பதையும், சளி இருமல், காய்ச்சல் போன்றவற்றால் யாரெல்லாம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதனையும் கணக்கெடுத்து சுகாதார அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பித்து  உள்ளனர் .இந்த பணியில் மாணவர்கள் அதிகமாக ஈடுபட்டுஉள்ளனர். 90 நாட்கள்  தொடர்ந்து நடைப்பெற உள்ள இந்த பணியில் ஈடுபட்டு உள்ள ஊழியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மொத்தம் 11 லட்சத்து 41 ஆயிரம் வீடுகளும், 19 லட்சத்து 84 ஆயிரம் குடும்பங்களும்  இருக்கின்றன.

அவ்வாறு பரிசோதனை செய்யப்படத்தில் 1222 பேருக்கும் சளி காய்ச்சல், இருமல் இருந்துள்ளது.  கண்டுபிடிக்கப்பட்டு மாநகராட்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் இவர்களில் 617 பேருக்கு சாதாரண காய்ச்சல் தான் உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் மற்ற நபர்களையும் தொடர்ந்து  கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் இவர்கள் அனைவரும் 14 நாட்கள்  தனிமைப்படுத்திக்கொள்ள   உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.