மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்...! 

மேஷ ராசி நேயர்களே.. உங்களுடைய பழைய நண்பர்கள் சரியான சமயத்தில் வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள். மேலும் உங்களுக்கு உண்டான பழைய கடன்களை பற்றி இன்று யோசித்து நல்ல முடிவு எடுப்பீர்கள்.

ரிஷப  ராசி நேயர்களே.. பொருள் வரவு, பணவரவு தேவையான அளவுக்கு திருப்தியாக இருக்கும்.  நல்ல மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். குழந்தைகளுக்காக அதிக நேரத்தை செலவிட முயற்சி செய்வீர்கள்.

மிதுன ராசி நேயர்களே.. எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் உங்களுக்கு கிடைக்கும். இதுவரை இருந்து வந்த குழப்பத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடிக்க ஆயத்தம் செய்வீர்கள்.

கடக ராசி நேயர்களே.. நீங்கள் நினைப்பது ஒன்றாக இருக்கும் நடப்பது ஒன்றாக இருக்கும். நீங்கள் என்னதான் மற்றவருக்கு செய்தாலும் அதற்கான பலன் கிடைப்பது. மிகவும் அரிதான ஒன்று. சொல்லப்போனால் இன்று உங்களுக்கு கசப்பான நாள்.

சிம்ம ராசி நேயர்களே.. இன்று ஒரு வேலையை முடிக்க வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்வீர்கள். ஆனால் அது முடியாமல் தள்ளி தள்ளி போக வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி நேயர்களே... உங்களுடைய அனைத்து முயற்சிக்கும் உங்களது பெற்றோர்கள் உறுதுணையாக என்று இருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்த பணம் உங்களை வந்தடையும்.

துலாம் ராசி நேயர்களே... பல நல்ல விஷயங்களுக்கு சுமூகமான முடிவு இன்று எடுப்பீர்கள். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

விருச்சிக ராசி நேயர்களே... இன்று பணவரவு இருக்கும். உங்களுடைய சகோதரர்கள் உங்களுக்கு உதவுவார்கள்

தனுசு ராசி நேயர்களே... இன்று நிறைய வேலை இருக்கும். உணவு கட்டுப்பாடு நல்லது. அலைச்சல் உண்டாகும்.

மகர ராசி நேயர்களே.. உங்களுடைய உற்சாகமான பேச்சு கவர்ந்து இழுக்கும். சோர்வு இல்லாமல் இருப்பீர்கள். புது வாகனம் வாங்க திட்டம் போடுவீர்கள்.

கும்ப ராசி நேயர்களே.. இதுநாள் வரை தடைப்பட்டு வந்த காரியம் இனிதே முடியும். உங்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரலாம்.

மீனராசி நேயர்களே..! நீங்கள் எடுக்கும் புது முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் உங்கள் உறவினர் மட்டுமின்றி நண்பர்கள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு உயரும். பல முக்கிய நபர்களின் அறிமுகம் எளிதில் உங்களுக்கு கிடைக்கப்பெறுவர்.