12 ராசியினரில் மாஸ் காட்டும் ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

எடுத்த முடிவை திடீரென மாற்றி வேறுவிதமாக முடிவு காண்பீர்கள். ஏராளமான செலவுகளை தவிர்க்க சில வழிமுறைகளை மேற்கொள்வீர்கள். அலைச்சல் ஏற்படலாம். 

ரிஷப ராசி நேயர்களே..! 

மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உறவினர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும் நாள். வெளிநாட்டு பயணங்கள் செல்ல வாய்ப்பு உண்டாகும்.

மிதுன ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு யோகம் அடிக்கும். யோசிக்காமல் செய்த சில வேலைகள் கூட உங்களுக்கு வெற்றியாக அமையும். எதிர்பார்த்த அளவிற்கு பண வரவு திருப்தியாக இருக்கும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள திட்டமிடுவீர்கள்.

கடக ராசி நேயர்களே..!

பாராட்டு மழையில் நனைய கூடிய நாள். உங்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்பு ஏற்படும். அரசு வழியில் ஆதாயம் உண்டு.

சிம்ம ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு வளர்ச்சி ஏற்படக்கூடிய நாள். நேற்றைய பணி ஒன்று இன்று மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். காணாமல் போன ஒரு பொருள் மீண்டும் உங்களுக்கு கிடைத்துவிடும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். எதையும் யோசித்து முடிவெடுத்து திட்டமிட்டு செயல்படுவது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

சொந்தங்களால் வந்த தொல்லை அகலும். நிதானத்துடன் செயல்படுவது தான் நல்லது. நிம்மதி ஏற்படும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பொது வாழ்வில் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும்.

கன்னி ராசி நேயர்களே...!

எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்

விருச்சிக ராசி நேயர்களே ..! 

விஐபிக்களின் சந்திப்பால் உங்களது விருப்பங்கள் நிறைவேறும். வீடு இடம் வாங்கும் முயற்சி அதிகரிக்கும். அன்பு நண்பர்களின் ஆதரவு இருக்கும். கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே..!

கடன் சுமை குறையும். காலை நேரத்தில் நல்ல தகவல் உங்களுக்கு வரலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்களை வாங்க ஆர்வம் அதிகரிக்கும்.

மகர ராசி நேயர்களே...! 

சேமிப்பை உயர்த்தும் நாள். வாகன பராமரிப்பில் கவனம் செலுத்துவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

கும்ப ராசி நேயர்களே...!

செல்வ நிலை உயரும் நாள். ஆதாரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சகோதர வழி பிரச்சினைகள் அகலும். தொழில் முன்னேற்றத்திற்காக முக்கிய நபர்களை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

மீனராசி நேயர்களே...!

பண வரவு திருப்தியாக இருக்கும். தன்னம்பிக்கையோடு பணி செய்யுங்கள். சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள நேரிடலாம். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.