12 ராசியினரில் பணவரவு யாருக்கு தெரியுமா...? 

மேஷ ராசி நேயர்களே..!

குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் செலவுகளை குறைக்க வேண்டும். கொடுக்கல்-வாங்கலில் மிக முக்கிய கவனம் தேவை.

ரிஷப ராசி நேயர்களே...!

உறவினர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நண்பர்களால் புதிய தகவல் வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

காலை நேரத்தில் இனிமையான செய்தி வந்து சேரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். நாட்டுப்பற்று மிக்கவர்கள் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே..!

மற்றவர்கள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் திருப்தியாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும்.

சிம்ம ராசி நேயர்களே...!

வெற்றிக்கு அடித்தளம் போடுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சி அதிகரிக்கும். பெற்றோர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி நேயர்களே..!

தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த செயலை எளிதில் முடிப்பீர்கள். சகோதரர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும்.

துலாம் ராசி நேயர்களே...!

திடீர் பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு புதிய கூட்டாளிகள் வந்து இணைவார்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சக ராசி நேயர்களே....!

வருமானம் இரண்டு மடங்காக உயரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சு ஒரு முடிவுக்கு வரும். ஆன்மீக பணியில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறப்புகளுக்கு உதவி செய்யும் எண்ணம் அதிகரிக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மறக்க முடியாத சம்பவமொன்று உங்களுக்கு நேரிடலாம்.

மகர ராசி நேயர்களே...!

பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டு பெறுவீர்கள். புதிய பதவிகள் வந்துசேரும். பெரிய மனிதர்களை சந்திக்க நேரிடலாம். வங்கி சேமிப்பு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் அதிகரிக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். புதிய தொழில் தொடங்க சிந்தனை பிறக்கும். எதார்த்தமாக பேசி அனைவரையும் உங்கள் வசம் வைத்துக் கொள்வீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும்.

மீனராசி நேயர்களே...!

எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும். மனதுக்கு பிடித்த சம்பவம் இன்று நடக்கும். வாயை அடக்கி வாசிப்பது நல்லது.