மேஷ ராசி நேயர்களே...!

உங்களுக்கு எதிலும் முன்னேற்றம் உண்டு. அதி வேகமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் இருந்த வருத்தங்கள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே....!

குடும்பத்தில் மனக்கசப்பு நீங்கும். கலகலப்பான சூழல் உருவாகும். உங்கள் ஆலோசனையை அனைவரும் கேட்பார்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

பெற்றோருடன் இருந்து வந்த மனக் கஷ்டங்கள் நீங்கும். மின்சார சாதனங்களை வாங்கி பயன்படுத்துவீர்கள். பயணத்தில் நிதானம் தேவை.

கடக ராசி நேயர்களே...!

சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபம் கொள்ளாதீர்கள். எதிலும் பொறுமை அவசியம். எதிர்பார்த்த தொகை வருவதற்கு சில காலம் தாமதம் ஆகலாம். உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

சிம்மராசி நேயர்களே...!

தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். வாகன வசதி வாங்க கூடிய சூழல் உருவாகும். வீடு கட்டுவதற்கான பேச்சு அடிபடும்.

கன்னி ராசி நேயர்களே...!

உங்கள் ஆளுமைத்திறன் நாளுக்கு நாள் அதிகரிக்கும். சவாலான சில காரியங்களை மிக எளிதாக செய்து முடிப்பீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

தந்தை வழியில் உங்களுக்கு எப்போதும் ஆதரவு கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள் சுபகாரியங்களை தலைமை தாங்கி நடத்த கூடிய சூழல் உருவாகும். உங்களது பேச்சில் நிதானம் தேவை.

விருச்சக ராசி நேயர்களே...!

வீடு வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். கருத்து வேறுபாடு மற்றும் சில பிரச்சினைகள் மிக எளிதாக தீர்த்து வைத்து விடுவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

பழுதான வாகனத்தை சீரமைப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மகர ராசி நேயர்களே...!

மனைவி வழியில் சில ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது குறித்து முற்படுவீர்கள். வங்கி தொடர்பான சில காரியங்கள் நிறைவேறும்.

கும்ப ராசி நேயர்களே...!

எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நண்பர்கள் உங்களைத் தேடி வந்து பேசுவார்கள். அவர்கள் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறலாம்.

மீனராசி நேயர்களே...!

ஆன்மீக நாட்டம் உங்களுக்கு அதிகரிக்கும். எதிர்காலத்தை ஊகித்து சில முக்கிய முடிவு மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடிவரும் வெளிவட்டாரத்தில் இப்போது உங்களுக்கு மரியாதை கூடும்