12 ராசியினரில் "ஆடை ஆபரணங்கள்" வந்து சேர கூடிய ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புதியவர்களின் நட்பால் உற்சாகமாக காணப்படுவீர்கள். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் வந்து சேரும். செலவுகளை குறைக்க கற்றுக்கொள்ளுங்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!'

பழைய சம்பவம் ஒன்றை நினைத்து கவலைப்படாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினர் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என்ற ஏக்கம் அவ்வப்போது வந்து செல்லும். மற்றவர்களை சந்தேகமாக பார்க்காதீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

சில காரியங்களை போராடி செய்ய வேண்டிய சூழல் உருவாகும். பிள்ளைகளால் மருத்துவச் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கடகராசி நேயர்களே...!

நீண்ட நாள் ஆசை ஒன்று விரைவில் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவு குறைய வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

உங்களுடைய ஆலோசனையை மற்றவர்கள் கேட்பார்கள். உங்கள் பிள்ளைகளின் பிடிவாத குணம் கொண்டு அவ்வப்போது மனதளவில் கோபப்படுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு விரைவில் நீங்கும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். எதையும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். உங்களது உறவினர்கள் நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு தேவையான இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

தொட்ட காரியங்கள் விரைவில் முடியும். நண்பர்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். நீங்கள் எதிர்பார்த்த வழக்கில் சுமுகமான தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மகர ராசி நேயர்களே...!

நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொடுப்பீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் கற்றுக் கொள்வீர்கள்.

மீனராசி நேயர்களே..!

சாதுர்யமாக பேசி அனைத்து காரியங்களையும் முடித்துக்கொள்வீர்கள்.உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வதில் முக்கிய பங்கு வகிப்பீர்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.