மேஷ ராசி நேயர்களே..!

இன்று உங்களுக்கு துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக அமையும். அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்றவாறு ஆதாயம் உண்டு. பொது விஷயத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

காலை நேரத்தில் உங்கள் மனதிற்கு ஏற்ற ஒரு விஷயம் வந்து சேரும். தைரியமாக தன்னம்பிக்கையோடு சில விஷயங்களை செய்து காட்டுகிறார்கள். பொதுவாழ்வில் புகழ் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி நாளுக்கு நாள் மேலோங்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

இல்லம் தேடி ஓர் இனிய செய்தி வரும். சுற்றி இருப்பவர்களிடம் நல்லமுறையில் நடந்து கொள்வது நல்லது. பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு மனநிம்மதி அடைவீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

வரவு இருமடங்காக அதிகரிக்கும். அயல்நாடு செல்ல அதிக ஆர்வமாக இருப்பீர்கள். வருங்கால நலன் கருதி புதிய திட்டத்தை தீட்டுவீர்கள். உங்களது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

சிம்மராசி நேயர்களே...!

சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு உங்களது திறமை மிகவும் ஒத்துழைப்பு கொடுக்கும். வீடு மனை வாங்குவதில் ஆர்வமாக இருப்பீர்கள்.

கன்னி ராசி நேயர்களே..!

உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். அரைகுறையாக நின்ற வீட்டு வேலை மீண்டும் தொடங்கும். முன்னேற்ற பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் உங்களைவிட்டு விலகிச்செல்வார்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனதில் உங்களுக்கே தெரியாத சில கவலைகள் வந்து செல்லும். உங்களது நட்பு பகையாகலாம். யாரிடமாவது பணம் வாங்க வேண்டிய சூழல் உருவாக வாய்ப்பு ஏற்படும்.

விருச்சக ராசி நேயர்களே...!

தொழில் முன்னேற்றத்திற்கு தொலைபேசி வழித் தகவல் உங்கள் மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். தொட்டதெல்லாம் நல்லபடி முடியும். சுபகாரியப் பேச்சுகள் முடிவுக்கு வரும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

உங்களுக்கு ஒரு நல்ல தகவல் வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த குழப்பம் மறையும். வருமானம் எதிர்பார்த்தபடி அமையும்.

மகர ராசி நேயர்களே...!

வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஆன்மீக வழிபாடு செய்வீர்கள். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு நன்மை கிடைத்திடும். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வரலாம்.

மீன ராசி நேயர்களே...!

வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து உங்களிடம் பேசுவார்கள். போட்டிகள் மெல்ல மெல்ல விலகும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும்.