12 ராசியினரில் வாசல் கதவை தட்டும் வாய்ப்பு யாருக்கு வரும் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

இன்று பொன்னான தகவல் வந்து சேரும். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். ஒரு சில பிரச்சினை விரைவாக முடியும்.

ரிஷப ராசி நேயர்களே...!

மற்றவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள் இன்று. மாலை ஒரு நல்ல செய்தி உங்களை தேடி வரும். மற்றவர்களிடம் யோசித்துப் பேசுவது நல்லது.

மிதுன ராசி நேயர்களே...!

விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் ஏற்படும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கடகராசி நேயர்களே...!

முயற்சி செய்து வெற்றி அடையும் நாள். இடம் வாங்க முற்படுவீர்கள். மகிழ்ச்சியாக செல்லக்கூடிய நாள். பொதுவாழ்வில் சில புதிய பொறுப்புகள் உங்களை வந்துசேரும்.

சிம்மராசி நேயர்களே...!

பணம் வந்து சேரும். பாதியில் நின்ற வேலை விரைவில் முடியும். வீட்டில் சுப காரியம் நடைபெற வாய்ப்பு ஏற்படும்.

கன்னி ராசி நேயர்களே...!

மகிழ்ச்சி அதிகரிக்கக்கூடிய நாள். தடைபட்ட சில காரியங்கள் விரைவாக முடிந்துவிடும். வரவு செலவு திருப்தியாக இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

விருச்சக ராசி நேயர்களே..!

முன்னேற்றம் ஏற்படும் நாள். முக்கிய புள்ளிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். லாபம் எதிர்பார்த்தபடி வரும். துணையாக இருந்தவர்கள் உங்களுக்கு எப்போதும் தோள் கொடுத்து உதவி செய்வார்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

ஏற்ற தாழ்வு மனப்பான்மை அவ்வப்போது வந்து நீங்கும். பழைய வாகனங்களை கொடுத்து புதிய வீடு வாகனம் வாங்க முற்படுவீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சுமுகமாக செல்லும்.

மகர ராசி நேயர்களே...!

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ கூடிய நாள். நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நல்ல செய்தி உங்களை தேடி வரும்.

கும்ப ராசி நேயர்களே...!

கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது வந்து அகலும். கௌரவம் புகழ் அதிகரிக்கும். உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனராசி நேயர்களே..!

உங்களின் ஒத்துழைப்போடு விரும்பிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கும்.  வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.