12 ராசியினருக்கும் நிலைமை இப்படிதான்...! 

மேஷ ராசி நேயர்களே...!

தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொல்லை தந்தவர்கள் உங்களைவிட்டு மெல்லமெல்ல விலகுவார்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய புதிய ஒப்பந்தங்கள் வரலாம்.

ரிஷப ராசி நேயர்களே...!

பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். தெளிவான சிந்தனை பிறக்கும். எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து சலுகைகள் கிடைக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

பக்குவமாக பேசி பாராட்டுகளை பெறுவீர்கள். விட்டுப் போன உறவுகள் மீண்டும் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மெல்ல மெல்ல அகலும். சொத்துகளால் எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கடக ராசி நேயர்களே...!

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள் இது. சேமிப்பு சற்று குறைய வாய்ப்பு உள்ளது எப்படியும் முடியும் என எதிர்பார்த்த வேலை ஒன்று முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.

சிம்ம ராசி நேயர்களே..!

மனகுழப்பம் ஏற்படும் நாள். மறதி அதிகரிக்கலாம். தொலைபேசி வழித் தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.

கன்னி ராசி நேயர்களே...!

தைரியத்துடன் செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். கடன் சுமை குறையும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் அடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் வரும்.

துலாம் ராசி நேயர்களே...!

புது முயற்சியில் வெற்றி அடைவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் வளர்ச்சியை கண்டு பெருமைப்படுவீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு யோகமான நாள். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் ஆர்வம் காண்பிக்க எடுத்த முயற்சி உங்களுக்கு ஆதாயம் கொடுக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

முன்னேற்றம் காண்பதற்கு முயற்சி எடுக்கும் நாள். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை செய்ய முன்வருவார்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

மகர ராசி நேயர்களே...!

செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் பார்க்க நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

கும்ப ராசி நேயர்களே..!

விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது மிகவும் நல்லது. வேலைப்பளு அதிகரிக்கக்கூடும். திட்டமிட்ட பயணம் ஒன்றில் திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆன்மீக நாட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

மீன ராசி நேயர்களே..! 

எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.