12 ராசியினரில் யாருக்கு ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே..!

உங்களுக்கு தோற்றப் பொலிவு அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வந்தடையும். புதிய நண்பரின் நட்பால் உற்சாகமாக காணப்படுவீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

செலவுகளை குறைக்க பல வழிகளை தேடி அலைவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள். உணவு விஷயத்தில் கண்டிப்பாக சில கட்டுப்பாடுகள் தேவை.

மிதுன ராசி நேயர்களே...!

குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து செல்லும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்களை அறவே தவிர்ப்பது நல்லது.

கடக ராசி நேயர்களே...!

சொந்த முயற்சியால் முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்கள் உறவினர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கக்கூடும். சொந்த பந்தங்களை உங்களை நாடி வருவார்கள். ஆடை ஆபரணங்கள் வாங்க முற்படுவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

புகழ் அதிகரிக்கும். சமூகத்தில் பிரபலமானவர்களால் உங்களுக்கு சில ஆதாயம் கிடைக்கும். சுப காரியங்கள் நடைபெறும்.

கன்னி ராசி நேயர்களே...!

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். திடீரென பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். மனக்கசப்பு சம்பவங்கள் நடைபெறும் நாள். எதற்கும் நம்பிக்கை இழக்க வேணடாம். 

துலாம் ராசி நேயர்களே..! 

குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பணப்புழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக உயரம். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. மதிப்பு மரியாதை உயரும். திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

துலாம் ராசி நேயர்களே...!

யாரையும் நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். வாகன செலவு அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

விருச்சக ராசி நேயர்களே....!

பலர் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற துடிப்பீர்கள்.பிள்ளைகளால் மதிப்பு உயரும். தடைப்பட்ட காரியங்கள் செய்து முடிப்பீர்கள். வீடு மனை வாங்க கூடிய சூழல் உருவாகும்.

தனுசு ராசி நேயர்களே...!

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு உங்களுக்கு கிடைக்கும். பழைய சொந்த-பந்தங்கள் உங்களை தேடி வர வாய்ப்பு உண்டு. உங்களின் ஆலோசனைகளை அனைவரும் ஏற்பர். 
உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் நாளுக்கு நாள் வெளியே தெரியவரும். உங்களின் நீண்ட நாள் கனவாக இருந்த ஒரு வாய்ப்பு உங்களை தேடி வரும் 

கும்ப ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முற்படுவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமைய வாய்ப்பு உண்டு. பயணங்களால் அலைச்சல் ஏற்படும். இருந்தாலும் அதற்கு ஏற்றவாறு ஆதாயமும் உண்டு.

மீனராசி நேயர்களே...!

சகோதரர் வகையில் உங்களுக்கு நன்மை ஏற்படும். பூர்வீக சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்