12 ராசியினரில் யாருக்கு குட் நியூஸ் வரப்போகுது தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

சுபச்செலவுகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கும். நீண்ட நாளாக நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும். திருமண பேச்சு தொடங்கும். வருமானம் தேவையான அளவுக்கு இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

இன்று காலை உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்து இருக்கும். வருங்கால நலன் கருதி சில விஷயங்களை செய்து காட்டுவீர்கள். இடம் வாங்க முற்படுவீர்கள். தொழில் மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...! 

கடவுள் பக்தி அதிகரிக்கும். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காது. திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். அடிக்கடி கோபம் வரும் 

கடக ராசி நேயர்களே...!

வளர்ச்சி அதிகரிக்கும். அன்றாட பணிகளில் இருந்து வந்த சில தடைகள் நீங்கி விடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிரியமான ஒரு சிலரிடம் பார்த்து பேசுவது நல்லது.

சிம்மராசி நேயர்களே...!

மகிழ்ச்சி அதிகரிக்கும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடிவடையும். ஒரு சில மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும்.

கன்னி ராசி நேயர்களே...!

போன் மூலம் நல்ல செய்தி வரும். தொழில் வளம் அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் வருமானம் போதுமானதாக இருக்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். புதிய முயற்சி வெற்றி அடையும். எப்படி நடக்குமோ என நினைத்த காரியம் நல்லபடியாக முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

விருச்சக ராசி நேயர்களே...!

வெற்றிக்கனியை எட்டிப் .பிடிப்பீர்கள் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் போட வேண்டிய நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு ராசி நேயர்களே...!

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் முக்கியத்துவம் கொடுத்து இருப்பது நல்லது. பிள்ளைகளால் பெருமை அதிகரிக்கும். இடம் பூமி வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்.

மகர ராசி நேயர்களே...!

நன்மைகள் நடக்கும் நாள் இது. பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. வாகன மாற்றம் குறித்து சிந்திப்பீர்கள். மங்கல நிகழ்ச்சி விரைவில் நடைபெறும்.

கும்ப ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த தொகை உங்களுக்கு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனராசி நேயர்களே..!

அலைபேசி மூலம் உங்களுக்கு நல்ல செய்தி வரும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வரவு திருப்தியாக இருக்கும். அயல்நாட்டில் இருந்து நல்ல செய்தி வரும்.