12 ராசியினரில் யாருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

பொது நலத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். புதியவர்கள் பலர் உங்களுக்கு நண்பர்களாவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு ஆதாயம் கிடைக்க கூடிய நாளாக அமையும்.

ரிஷப ராசி நேயர்களே...1

கோவில் வழிபாட்டால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். பெரியோர்களின் ஆசி உங்களுக்கு இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்காமல் இருந்த பல காரியங்கள் விரைவில் செய்து முடிப்பீர்கள்.

மிதுன ராசி நேயர்களே..!

 அதிக செல்வம் பெருகும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்க முயற்சி அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே...!

குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் சுமுகமாக நடைபெறும். அலைச்சல் அதிகமாக இருந்தாலும் அதற்கேற்ற வருவாய் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி நேயர்களே...!

பங்குதாரர்களை மாற்ற சூழ்நிலை உருவாகும். எதிலும் அவசரம் வேண்டாம். யாரிடமும் வீண்  பேச்சு வேண்டாம். 

கன்னி ராசி நேயர்களே...!

தெய்வ வழிபாடுகளால் திருப்தி அடைவீர்கள். நடக்காத ஒன்றை நினைத்து கவலைப்படாதீர்கள். குடும்ப பிரச்னைகளில் தலையிடாமல் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடலாம்.

துலாம் ராசி நேயர்களே...!

நாட்டுப்பற்று மிக்கவர்கள் வீட்டு பிரச்சினையை தீர்த்து வைப்பர். வரவு செலவு திருப்தியாக இருக்கும். வெளிவட்டாரத்தில் உங்களது மதிப்பு உயரும். பொதுவாழ்வில் பாராட்டும் புகழும் உங்களுக்கு கிடைக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

அரசியல்வாதிகளால் உங்களுக்கு ஆதாயமுண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். இல்லத்தில் பல சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டு.

தனுசு ராசி நேயர்களே...!

தள்ளிப்போன காரியங்கள் தானாக நடைபெறும். காலை நேரம் கனிவான செய்திகள் வந்து சேரும். தொழிலில் புதிய பல நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

ஆடை ஆபரணங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று மாலைக்குள் ஒரு நல்ல செய்தி உங்களை தேடி வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கும்பராசி நேயர்களே...!

எதிரிகள் உங்களை விட்டு பிரிந்து செல்வார்கள். முன்னேற்றம் கருதி நல்ல முடிவை எடுப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு அனைவரும் உதவியாக இருப்பார்கள்.

மீன ராசி நேயர்களே...!

பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டை சீரமைக்கும் எண்ணம் உருவாகும். உங்களுக்கு வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.