12 ராசியினரில் யாருக்கு பணவரவு அதிகம் தெரியுமா..? 

 மேஷ ராசி நேயர்களே..!

உத்தியோகத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு உங்களுக்கு கிடைக்கும்.  திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.மதிப்பும் மரியாதையும் உயரும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.

ரிஷப ராசி நேயர்களே...!

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இல்லத்தில் நல்ல நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

மிதுன ராசி நேயர்களே..!

நேற்றைய பிரச்சினை குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு தடை கல்லாக இருந்த அனைத்தும் விலகும். விருந்தினர் வருகை இருக்கலாம். பண வரவு திருப்தியாக இருக்கும்.

கடக ராசி நேயர்களே..!

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சொத்து வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

சிம்மராசி நேயர்களே..!

அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் செலவு ஏற்படும்.
தேவை இல்லாத வேளைகளில் மூக்கை நுழைக்க வேண்டாம்.

கன்னி ராசி நேயர்களே...!

ஆலய வழிபாடு செய்வீர்கள். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரும். கல்யாண முயற்சி கைகூடும். தொழிலில் ஆக்கபூர்வமான மாற்றத்தை கொண்டு வருவீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தடைக்கற்கள் நீங்கி தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

விருச்சிக ராசி நேயர்களே....!

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் ஆர்வம் காண்பிப்பீர்கள். விஐபிக்களின் சந்திப்பு நல்ல பலன் கிடைக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

கடமையில் இருந்த தொய்வு அகலும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பொருளாதார நிலை உயர்ந்து காணப்படும்.

மகர ராசி நேயர்களே...!

கவலை அகலும் நாள். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும் வழிபாட்டு தலங்களுக்கு செல்வீர்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

கூட்டு முயற்சியில் உங்களுக்கு பெரும் வெற்றி கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்கம் நாளுக்கு நாள் விரிவடைந்து ஓர் முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் நல்ல காரியம் நடைபெறும்.

மீனராசி நேயர்களே...!

செலவு அதிகரிக்கும். குடும்ப சுமை அதிகரிக்கும். இறைவழிபாட்டில் ஈடுபடுவது நல்லது. அவசரத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.