12 ராசியினரில் இன்று யோகம் யாருக்கு தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

பேச்சில் கம்பீரம் அதிகரிக்கும். அனுபவ அறிவு உங்களுக்கு உதவி செய்யும். மாறு பட்ட அணுகுமுறையால் வரவேற்பை பெறுவீர்கள். திடீரென உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வரலாம்.

ரிஷப ராசி நேயர்களே...!

தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். அழகு ஆரோக்கியம் அதிகரித்து புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே..! 

வீடு வாகன செலவு ஏற்படும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. அதிக உரிமையுடன்ன் யாரிடமும் பேசவேண்டாம்.

கடக ராசி நேயர்களே...!

எத்தனை பிரச்சினை வந்தாலும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சாமர்த்தியமாக சமாளித்து பேசுவீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

இழுபறியான பல விஷயங்கள் உடனுக்குடன் முடிவுக்கு வரும். வீடு மனை வாங்குவது குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்து பிரச்சினையில் தீர்வு ஏற்படும்.

கன்னி ராசி நேயர்களே...!

அடிமனதில் நிலவிய ஒருவிதமான பயம் நீங்கும். தடைகள் நீங்கி சாதனை செய்வீர்கள். பிரபலமான சிலர் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

பழைய நண்பரை சந்திக்க உற்சாகமாக காணப்படுவீர்கள். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவீர்கள். குலதெய்வ பிரார்த்தனை உங்களுக்கு உதவி செய்யும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

தொட்ட காரியங்கள் நல்லபடி முடியும்.  இடத்தை விற்று புது வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

தனுசு ராசி நேயர்களே...!

எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். இளமை அதிகரிக்கும். சகிப்புத் தன்மையை அதிகரிக்க செய்யும். திடீரென விருந்தினர் வரலாம்.

மகர ராசி நேயர்களே...!

யாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனாலும் சிலர் உங்களை குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

கும்ப ராசி நேயர்களே..!

அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். பழைய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.

மீனராசி நேயர்களே...!

தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மிக சுற்றுலா செல்லக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். விலகியிருந்த பழைய நண்பர்கள் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.