12 ராசியினரில் ஜகஜோதியாக இருக்கக்கூடிய நபர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்கள்...!

இன்று தொழில் முன்னேற்றம் குறித்து பேசுவீர்கள். கேட்ட இடத்திலிருந்து தேவையான உதவி கிடைக்கப் பெறும் . நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். புதிய நண்பர்களின் சந்திப்பால் மனம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

நேற்றைய சேமிப்பு இன்று உங்களுக்கு பேருதவியாக இருக்கும். பொது நலத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

மிதுன ராசி நேயர்களே...!

வீட்டில் உள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது மிகவும் நல்லது. திடீர் செலவுகளை சமாளிக்க முடியாமல் பிறரிடமிருந்து பணம் பெறக்கூடிய நிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடக ராசி நேயர்களே..!
.
நாட்டிலிருந்து நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களது பழக்கம் விரிவடையும். வருமானம் இருமடங்காக அதிகரிக்கும்.

சிம்ம ராசி நேயர்களே..!

உங்களுடைய அந்தஸ்து நாளுக்குநாள் உயரும். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.  புதிய ஒப்பந்தம் செய்ய வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி நேயர்களே...!

சாமர்த்தியமாகப் பேசி சாதனை செய்யும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் பழைய பிரச்சினைகளை தீர்க்க சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

பழகிய நண்பர்களுக்காக கணிசமான பணத்தை செலவிடும் சூழ்நிலை ஏற்படும். வழிபாடு வளர்ச்சி தரும். அதிக வேலைப்பளு உருவாகும்.

விருச்சிக ராசி நேயர்களே..! 

நல்ல செய்தி வந்து சேரும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு மற்றவர்கள் உதவி செய்வார்கள். அரசியலில் ஈடுபாடு அதிகரிக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!'

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். எடுத்த காரியத்தை முடித்துக் காட்டுவீர்கள். பெண்கள் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. கடன் சுமை குறைய தொடங்கும். 

மகர ராசி நேயர்களே ..!

நீண்ட நாள் முயற்சியில்  வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். இடம் வாங்க திட்டமிடுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சி மேற்கொள்வீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

நண்பரின் சந்திப்பு நன்மை கொடுக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை தேவை. உத்தியோகத்திலிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

மீனராசி நேயர்களே..!

சகோதரர் வழியில் வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனையை சுமூகமாக  முடிக்கலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் அதிகரிக்கும்.