12 ராசியினரில் வாயை இன்று கட்டாயம் அடக்கி வாசிக்க வேண்டிய ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். உடன்பிறப்புகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வருங்கால நலன் கருதி பல புதிய திட்டங்களை தீட்டுவீர்கள்.

 ரிஷப ராசி  நேயர்களே..! 

உறவினர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத பண உறவு கிடைக்கும் .

மிதுன ராசி நேயர்களே..! 

வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் சில பிரச்சினைகள் உருவாகும்.

கடக ராசி நேயர்களே...!

நிம்மதி கிடைக்க நிதானமாக செயல்படுவது நல்லது. நீண்டநாள் நண்பர் ஒருவர் உங்களுக்கு உதவி செய்வார்கள். உடல்நலம் சீராக இருக்கும்

சிம்மராசி நேயர்களே...!

மற்றவர்களிடம் பேசும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி குறைய வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

 உங்களுடைய நட்பு வட்டாரம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வீடு கட்டும் முயற்சி மேலோங்கும்.

துலாம் ராசி நேயர்களே...!

சம்பள உயர்வு பற்றிய சந்தோஷமான தகவல் உங்களுக்கு வந்து சேரும். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சி வெற்றி அடையும். வாழ்க்கை தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சக ராசி நேயர்களே...!

நல்லவர்களை சந்தித்து சந்தோஷமாக இருப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.

தனுசு ராசி நேயர்களே...!

உங்களது இல்லத்தில் மகிழ்ச்சியான சம்பவம் நடைபெறும். தொழில் முன்னேற்றத்திற்காக நண்பர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

மகர ராசி நேயர்களே...!

பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உறவினர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சுப செய்தி வந்து சேரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை

மீன ராசி நேயர்களே...!

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புகழ்மிக்க சந்திப்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேசும் போது நிதானம் தேவை. அடக்கி வாசிப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.