12 ராசியினரும் இன்று கவனிக்க வேண்டிய விஷயம்...! 

மேஷ ராசி நேயர்களே..! 

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த அன்னோன்யம் அதிகரிக்கும். கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முயற்சி மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.

ரிஷப ராசி நேயர்களே...!

யாரிடமும் அனாவசியமாக உறுதிமொழி கொடுக்கவேண்டும். ஆன்மீ க நாட்டம் அதிகரிக்கும்.திடீர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய வரும்

மிதுன ராசி நேயர்களே...!

மனைவி வழியில் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும் பெற்றோர் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

கடக ராசி நேயர்களே...!

வங்கி மற்றும் அரசு வேலையில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பண பற்றாக்குறை தீரும். நிதானமாக செயல்படுவது நல்லது.

சிம்ம ராசி நேயர்களே...!

பிள்ளைகளின் குடும்ப சூழ்நிலை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள். அக்கம்பக்கத்தினர் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

கன்னி ராசி நேயர்களே...!

எதிர்ப்புகளை தாண்டி முன்னேற்றம் அடைவீர்கள். தாய்வழி உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.  புதிய முயற்சிகள் மூலம் புதிய சாதனை படைப்பீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து அதற்கேற்றவாறு நடந்து கொள்வீர்கள் பிரபலங்களின் அறிமுகம் உங்களுக்கு கிடைக்கும். சொத்து பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

விருச்சிக ராசி நேயர்களே...!

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் விரைவாக முடியும். உற்சாகம் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம்  உண்டு.

தனுசு ராசி நேயர்களே..!

பணம் நகை விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். 

மகர ராசி நேயர்களே...! 

உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. பழைய நண்பர் ஒருவரைச் சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

எப்படியாவது கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என நினைப்பீர்கள் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள் பிரியமானவர்களுக்கு சிலவற்றை வாங்கி கொடுப்பீர்கள் 

மீனராசி நேயர்களே...!

குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் உங்களிடம் வந்து பேசுவார்கள்.