12 ராசியும்... அதன் பலன்களும்...! 

மேஷ ராசி நேயர்களே...!

திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிக்க முயற்சிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என சிந்திப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

எதிர்பார்த்த இடத்தில் இருந்து உங்களுக்கு பணம் கிடைக்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாகனத்தை சரி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்.

மிதுன ராசி நேயர்களே...!

திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனதில் அவ்வப்போது சில குழப்பங்கள் வந்து போகலாம். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே...!

பல சவால்களை தாண்டி வெற்றிபெற உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மராசி நேயர்களே....!

வெளியூரிலிருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் பேசி ஒரு சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களால் தொல்லைகள் வந்தாலும் அதனை மிக எளிதாக சமாளித்து காட்டுவீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

தாழ்வுமனப்பான்மை அடிக்கடி தலைகாட்டும். வீடு பராமரிப்பு மேற்கொள்வீர்கள். படபடப்புடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்சினை முடிவுக்கு வரும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

குடும்பத்தினரிடையே வீண் விவாதம் ஏற்படக்கூடும். யாரையும் அனாவசியமாக பகைத்துக் கொள்ள வேண்டாம். சகோதர வகையில் உங்களுக்கு மனத்தாங்கல் வரலாம். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

தாமதமான சில காரியங்களை மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். உங்களின் நடவடிக்கைகளில் புத்திசாலித்தனம் தென்படும்.

கும்ப ராசி நேயர்களே...!

வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

மீனராசி நேயர்களே...!

எந்த காரியத்தை தொட்டாலும் பல முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.