உங்க ராசிக்கு எப்படியெல்லாம் முன்னேற போறீங்க தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

இன்று உங்களுக்கு உத்தியோக உயர்வு குறித்த தகவல் வந்து சேரும். உங்கள் சிந்தனை 
மேலோங்கும். உங்களுக்கு மேலும் சில பொறுப்புகள் வந்தடையும்.

ரிஷப ராசி நேயர்களே...!

விவாதத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் உங்களுக்கு நீங்கும். வாய்ப்புகள் தேடி வரும். வீடு மற்றும் வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.

மிதுன ராசி நேயர்களே...!

எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க உங்களது சகோதரர்கள் உதவி புரிவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.

கடகராசி நேயர்களே...!

எதிர்பார்த்த தகவல் உங்களை தேடிவரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. திடீரென வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

சிம்ம ராசி நேயர்களே...!

சகோதரர்களால் ஆதாயமுண்டு. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் செலவுகள் அதிகரிக்கும்.

கன்னி ராசி நேயர்களே...!

வருமானம் திருப்தியாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். சேமிப்பை உயர்த்துவதில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

துலாம் ராசி நேயர்களே...!

கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள் இது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். வீடுகட்டும் முயற்சியில் இருந்த தடுமாற்றம் நீங்கி விடும்.

விருச்சிக ராசி நேயர்களே...!

மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மதிப்பும் மரியாதையும் உயரும். பணவரவு எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்பு உண்டாகும்.

தனுசு ராசி நேயர்களே...!

பக்கத்தில் இருப்பவர்கள் உங்களின் பணத்தேவைகளை பூர்த்தி செய்வார்கள். தொலைபேசி வழியில் உங்களுக்கு நல்ல செய்தி வந்தடையும்.

மகர ராசி நேயர்களே...!

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். ஒரு சில காரியங்களில் மாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

கும்ப ராசி நேயர்களே...!

உங்களைவிட்டு எதிரிகள் விலகுவார்கள். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் மாற்று  கருத்தால் நண்பர்களிடம் மனக்கசப்பு ஏற்படலாம்.

மீனராசி நேயர்களே...!

நினைத்த காரியம் நிறைவேறும் நாள் இது. பிள்ளைகள் வழியில் சுபச் செலவு களை சந்திக்க நேரிடும். தொழிலில் இருந்து வந்த மறைமுக போட்டிகள் அகலும்.