மேஷ ராசி நேயர்களே..! 

அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழக்கூடிய நாள். உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வாக இருப்பீர்கள்.

ரிஷப ராசி நேயர்களே..!

உங்களை சிலர் நேரில் வந்து சந்தித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கையில் தேவையான சில விஷயங்களைப் பூர்த்தி செய்து கொள்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த லாபம் உங்களுக்கு கிடைக்கும். திடீரென அலைச்சல் ஏற்பட்டு அதற்கு உண்டான பலன் கிடைக்கும்.

மிதுன ராசி நேயர்களே...!

ஆனந்தமாக வாழ சிந்திப்பீர்கள். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். சமுதாயத்தில் உங்களுடைய அந்தஸ்து உயரும். தொலைபேசி வாயிலாக ஒரு நல்ல செய்தி வந்தடையும்.

கடக ராசி நேயர்களே..!

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும். சேமிக்கும் பழக்கத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்வீர்கள்.

சிம்ம ராசி நேயர்களே...!

உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பேசும் போது சற்று கவனித்து பேசவேண்டும்.

கன்னி ராசி நேயர்களே...!

தொலை தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம். வெளிவட்டாரத்தில் உங்களுடைய பழக்கவழக்கம் அதிகரிக்கும் .அரசு சார்ந்த சில விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். இதுவரை நீண்ட இழுபறியாக இருந்து வந்த சில வேலைகள் முடிவுக்கு வரும்.

துலாம் ராசி நேயர்களே..! 

நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த வீடு கட்டும் பணி மீண்டும் தொடங்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சில சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறி இன்று தென் பட வாய்ப்பு உண்டு.

விருச்சிக ராசி நேயர்களே..!

இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். நீண்ட நாட்களுக்கு பின் உங்களின் பழைய நண்பரை சந்தித்து மகிழ்வாக இருப்பீர்கள். 

மகர ராசி நேயர்களே..!

இன்று இனிமையான நாளாக இருக்கும். உங்கள் நெருங்கிய உறவினர்களுடன் ஏற்பட்ட நெரிசலில் மாற்றம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு உங்களுடைய நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திடீரென வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

தனுசு ராசி நேயர்களே..!

வெளியூர் பயணங்கள் மேக்கொள்ள வேண்டி வரும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த  சில வேலை முடிவுக்கு வரும். 

கும்ப ராசி நேயர்களே...!

சகோதரர் வழியில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள்.குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும்.

மீனராசி நேயர்களே...!

இல்லம் தேடி இனிய செய்திகள் உங்களுக்கு வரும். உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.