12 ராசியினரில் இன்று வாயை கொஞ்சம் அடக்க வேண்டிய ராசியினர் யார் தெரியுமா..? 

மேஷ ராசி நேயர்களே...!

அதிரடியாக சில திட்டங்களைத் தீட்டுவீர்கள். தனவரவு தேவையான அளவுக்கு இருக்கும். உங்களை தேடி வந்து சிலர் உதவி செய்வார்கள். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு ஏற்படலாம்.

ரிஷப ராசி நேயர்களே...!

முகப் பொலிவு அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் கல கலப்பாக காணப்படும். பிள்ளைகளால் உங்களுக்கு எப்போதும் பெருமை உண்டு.

மிதுன ராசி நேயர்களே...!

மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரின் கவனத்தை ஈர்க்கக் கூடிய நபர் நீங்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி நேயர்களே...!

வெளிவட்டாரத்தில் உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபடலாம் 

சிம்மராசி நேயர்களே..! 

மனக் குழப்பங்கள் விலகி தெளிவான முடிவை எடுப்பீர்கள். வெளியூரிலிருந்து உறவினர்கள் நண்பர்களின் வருகை அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து காட்டுவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

சின்ன சின்ன கவலைகள் அவ்வப்போது வந்து போகும். நீங்கள் மற்றவர்களிடம் பேசும் போது மிகவும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் நிதானமாக செயல்பட வேண்டும்.

துலாம் ராசி நேயர்களே...!

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டிய சூழல் உருவாகும். அனாவசிய செலவுகளை தவிர்த்து சேமிக்க முயற்சி செய்வது நல்லது.

விருச்சக ராசி நேயர்களே...!

வெளியூரிலிருந்து உறவினர்கள் நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாக மாறும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் பழகிக்கொள்ளுங்கள். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உங்களுக்கும் அதிகரிக்கும்.  உங்களுடைய உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திழுக்க செய்தீர்கள்.

மகர ராசி நேயர்களே...!

சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுடைய சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வீடு மனை வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

கும்ப ராசி நேயர்களே...!

அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அனாவசியமாக அடுத்தவர்களை குறை கூறாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியில் செல்லும்போது கவனமாக செல்வது நல்லது.

மீனராசி நேயர்களே...!

கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுக்கு பிடித்த ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள்.