12 ராசியினரில் 6 ராசியினருக்கு இன்று சோதனை தானுங்க ..! 

மேஷ ராசி நேயர்களே...!

சேமிப்பு இன்று அதிகரிக்க செய்வீர்கள். உடல்நலனில் அக்கறை தேவை.அரசியல்வாதிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

ரிஷப ராசி நேயர்களே...!

உங்களுக்கு மகிழ்ச்சியான நாள். தனவரவு அதிகரிக்கும். நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். பஞ்சாயத்துகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆரோக்கியம் நலமாக இருக்கும்.

மிதுன ராசி நேயர்களே..!

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். வீடு வாகன பராமரிப்பு கவனம் செலுத்துவீர்கள். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்க முயற்சி மேற்கொள்வீர்கள்.

கடக ராசி நேயர்களே...!

விடியற்காலையில் நல்ல தகவல் வந்து சேர்ந்து இருக்கும். வியாபாரம் அதிகரிக்கும். உடன்பிறப்புகள் வழியில் ஏற்பட்ட பிரச்சனை தீர்வு ஏற்படும். 

சிம்ம ராசி நேயர்களே...!

புதியபாதை உங்களுக்கு அமையும். புகழ் மிக்கவர்கள் சந்திப்பு எளிதாக நடக்கும். தனவரவு எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர முற்படுவீர்கள்.

கன்னி ராசி நேயர்களே...!

முன்னேற்றம் கூட முக்கிய புள்ளிகளை சந்திக்கும் நாள் இது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேலும் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும்.

துலாம் ராசி நேயர்களே...!

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள்... படபடப்பு அவ்வப்போது வந்து போகும். வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். பயணங்களில் காலதாமதம் ஏற்படலாம். மருத்துவ செலவு கட்டாயம் உண்டு.

விருச்சிக ராசி நேயர்களே...!

செல்வாக்கு உயரும் நாள். செல்வம் அதிகரிக்கும். தொலைபேசி வாயிலாக நல்ல செய்தி கேட்பீர்கள். எதிர்பாராத விதமாக நண்பர்களை சந்தீப்பீர்கள்.

தனுசு ராசி நேயர்களே...!

தொழில் தொடங்க புதிய முயற்சியில் இறங்குவீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும்.

மகர ராசி நேயர்களே...! 

தன்னம்பிக்கை அதிகரிக்கும். துடிப்போடு செயல்பட்டு பல வேலைகளை எளிதாக முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நேரம் வரும்.

கும்ப ராசி நேயர்களே...!

நண்பர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. உணர்ச்சிவசப் படாமல் இருப்பது மிகவும் சிறந்தது. உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.

மீனராசி நேயர்களே...!

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு மாற்றங்கள் திருப்தியாக அமையும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு.